×

மாடல் தொகுதியாக மாற்றுவேன்: அசன் மவுலானா உறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை 180வது வட்டம் பிள்ளையார் கோயில் தெரு, பாரதி தெரு, வாஞ்சிநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அசன் மவுலானாவுக்கு ஆதரவாக திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, 180வது வட்டத்தில் தீவிர  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் அசன் மவுலானா பேசுகையில்,‘‘ வேளச்சேரி தொகுதியின் முக்கிய பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். இந்த தொகுதியை ஒரு ‘மாடல் தொகுதியாக’ மாற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

எனது உறுதி மொழிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமானால், கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்,’ என்றார். திமுக பகுதி செயலாளர் சு.சேகர் மற்றும் நிர்வாகிகள் கோபி, ரகுநாதன், மகாதேவன், சித்ரா வெங்கடேசன், டில்லி குமார், வேதகிரி, ஜெகதீஷ், வரதன், சித்தார்த்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அவருடன் சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.


Tags : Assan Maulana , I will change the model block: Assan Maulana confirmed
× RELATED புதிதாக திறக்கப்பட்டுள்ள வேளச்சேரி...