×

தாமரக்கு ஓட் போட்டு: எனக்கு என்ன லாபம்?: ‘தங்கிலீஸில்’ நமீதா பிரசாரம்

மதுரை வடக்கு தொகுதி அதிமுக கூட்டணியின் பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஓட்டு கேட்டு நடிகை நமீதா வேனில் நின்றபடி பிரசாரம் செய்து பேசியதாவது: வணக்கம்... சவ்க்யமா நிங்க.. சகோதரி, அக்கா, தங்கச்சி, பாட்டி எல்லோருக்கும் வணக்கம்... மச்சான், ஒங்களுக்கும் வணக்கம்..  தாமரக்கு ஓட் போடுங்க.. ஏன்னு கேக்றீங்களா? சென்ட்ரல் கவுர்ன்மென்ட் ஸ்கீம், ஸ்டேட் கவுர்ன்மென்ட் ஸ்கீம் எல்லாம் ஒங்க வீட்டுக்கு தேடி வரும். தாமரக்கு ஓட் போட்டு எனக்கு என்ன லாபம்? நெனச்சுக்கு  போறீங்க..? கண்டிப்பா. ஏங்கிட்ட பதில் இருக்கு..

நான் சொல்றேன். வருஷத்துக்கு 6 கேஸ் சிலிண்டர் கொடுக்கப்போறேன். அது புல்லா இலவசமா, சந்தோஷமா? அப்ப உங்க பேவரைட் பிரியாணி செஞ்சு சாப்டுங்க.. ஓகே எனக்கு இன்வைட் பண்ணுங்க, நான் வெஜிடேரியன், வெஜிடேரியன் பிரியாணி. சரியா, மாசத்துக்கு ஒரு குடும்பத்துக்கும், தலைவிக்கும் ஆயிரத்து 500 ரூபா கொடுக்கப்போறேன்.. இலவசமா.. இடம் இல்லாதவன்களுக்கு இடம் கொடுத்து வீடும் கட்டிக்கொடுக்றேன்.. இலவசமா. ஓட்டிங் மெஷின்ல முதல் பட்டன், பர்ஸ்ட் பட்டன்... அதான் யூஸ் பண்ணுங்க, அதான் தாமர... தாமரக்கு ஓட் போடுங்க. இவ்வாறு நமீதா பேசினார்.

Tags : Namitha , Politics
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...