×

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச பயிற்சி: அண்ணா மேலாண்மை நிலையம் அறிவிப்பு

சென்னை: யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறை தலைவர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் குடிமை பணி தேர்வில் வெற்றிபெற்று மைய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் உட்கார வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு உருவானது. அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம். கடந்த 25ம் தேதி மத்திய தேர்வாணையம் நடத்திய முதன்மை தேர்வுகளின் இறுதி முடிவில் இப்பயிற்சி மையத்தில் தங்கி பயின்ற 19 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்த மையத்தில் பயின்று வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை சார்ந்த முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி ஆளுமை தேர்வை இம்மையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் மாதிரி ஆளுமைத்தேர்வு முதன்மை தேர்வில் தகுதி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் நடத்தப்பட இருக்கிறது. மாதிரி ஆளுமை தேர்வு 08.04.2021, வியாழக்கிழமை அன்றும் 09.04.2021 வெள்ளிக்கிழமை அன்றும் இரு நாட்கள் நடத்தப்பட உள்ளன.  

ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஊக்கத்தொகையாக 2000 வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் காணலாம். ஆகவே, முதன்மை தேர்வு வெற்றியாளர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை பயிற்சி மைய முதல்வருக்கு aicscc.gov@gmail.com என்ற  மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ புகைப்படத்துடன் ஏப்ரல் 3ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : UPSC ,Anna Management Center , UPSC, Anna Management Center, Announcement
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...