கோத்தகிரி அருகே விதிமுறை மீறி தேயிலை தோட்டங்களை அழித்து சொகுசு விடுதி கட்ட திட்டம்?சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்

குன்னூர் : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் அதைப் பயன்படுத்திக்கொண்டு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கேர்கம்பை, கன்னேரிமுக்கு, கைகாட்டி பகுதிகளில்  தேயிலை தோட்டங்களை இரவு நேரங்களில் ஜேசிபி மற்றும் டிராக்டர் உதவியோடு அழித்து வருகின்றனர்.மேலும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரம் ஜேசிபி இயக்கப்படுவதால், வனவிலங்குகள் இரைதேட  மிகவும் சிரமப்படுகின்றன.

விதிமுறைகளை மீறி தேயிலைத் தோட்டங்களை அழித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மலைமாவட்டத்தில் தடையை மீறி சட்டவிரோதமாக இயக்கப்படும் ஜேசிபி, டிராக்டர் போன்றவர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிமுறைகளை மீறி தேயிலைத் தோட்டங்களை அழித்து வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் விடுதிகள் கட்டுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More