×

டெல்லி முதல்வரின் அதிகாரங்கள் பறிப்பு : துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி : டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை டெல்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றபட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மோசமான நாளாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.  இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் இனி அறிவிக்கை வெளியிடும். டெல்லியில் துணை நிலை ஆளுநருடன்  அதிகார மோதலில் ஈடுபட்டு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிர்வாகத்துக்கு புதிய சட்டம் கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Tags : Delhi ,The ,President , Bill, approved by the President
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...