சிவகங்கை அதிமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் திடீர் ரெய்டு: நள்ளிரவு வரை நடந்ததால் பரபரப்பு

காளையார்கோவில்: சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்ைக மாவட்டத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. எனவே காஞ்சிரங்காலில் உள்ள அதிமுக கிளை செயலாளர் வீட்டில் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் சோதனை நடந்தது.

இதேபோல் காளையார்கோவிலை சேர்ந்தவர் வழக்கறிஞர் நக்கீரன். இவர் சிவகங்கை தொகுதி வேட்பாளரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான செந்தில்நாதனின் உறவினர் ஆவார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் பங்கேற்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், உறவினர்கள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>