×

உங்களை தேடி உங்கள் நண்பன் முகாம்: பிரபாகர் ராஜா அறிவிப்பு

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா நேற்று காலை சிவன் பூங்காவில் வாக்கிங் சென்றவர்களிடம் திமுகவின் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “கோயம்பேடு மார்க்கெட் நவீனப்படுத்தப்படும். தினந்தோறும் இந்த மார்க்கெட்டுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். அவர்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும். மக்கள் எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம்.

உங்களை தேடி உங்கள் நண்பன் என்ற பெயரில் தெருக்கள் தோறும் முகாம்கள் நடத்தி பிரச்னைகள் தீர்க்கப்படும். உயர்நிலை மின் கம்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களின் உடல் நலம் பேணி பாதுகாக்கப்படும்” என்றார். பிரசாரத்தில் பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், வட்ட செயலாளர் பொன் வரலோகு, மைக்கேல், ராமச்சந்திரன், ரஞ்சித் குமார், வேளாங்கண்ணி, பாண்டியன், சுப்பிரமணியன், விஜயலட்சுமி, பொன் சேகர், சத்தியா, கணேஷ், ராஜசேகர், நந்தா மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Prabhakar Raja , Find Your Friend Camp: Prabhakar Raja Announcement
× RELATED அடையாறு ஆற்றில் தடுப்புச்சுவர்: பிரபாகர் ராஜா வாக்குறுதி