×

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் கொரோனா தீவிரம்: 5 வகை யுக்தியை கடைபிடிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை..!

புதுடெல்லி: மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, தமிழ்நாடு, சட்டீஷ்கர், மத்தியப்  பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப்  மற்றும் பீகார் ஆகிய கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இம்மாதத்தில் நாடு முழுவதும் பதிவான 71 சதவீத தொற்றுகள் மற்றும் 69 சதவீத உயிரிழப்புகள் 46 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களுடன் உயர்மட்ட கூட்டத்தை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நடத்தினார். இம்மாநிலங்களின் கூடுதல் தலைமை செயலாளர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்கள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 46 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பாலும் கலந்து கொண்டார்.

அப்போது, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூட்டத்தின் போது ஐந்து வகை யுக்தி ஒன்று வகுக்கப்பட்டது. அதன்படி, கொரோனா பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல் ேவண்டும். பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல் வேண்டும். பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல் வேண்டும். சரியான கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையை உறுதி செய்தல் வேண்டும். அதிகளவில் பாதிப்புகள் பதிவாகி வரும் மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் ஆகிய இந்த ஐந்து வகை யுக்தி ஆகும். இதனை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Tamil Nadu , Corona intensity in 12 states including Tamil Nadu: Central government advises states to follow 5 types of tactics ..!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...