×

மேட்டுப்பாளையத்தில் 48 நாட்கள் நடந்த யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 8ம் தேதி தமிழக கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்கி நடைபெற்று வந்தது. முகாம் துவங்கி ஒரு வாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலியதாவை பாகன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து, யானை கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. இதனால், 25 யானைகளுடன் முகாம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. இதன்பின், யானைகள் அனைத்தும் லாரிகள் மூலம் அதன் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முகாமில், யானைகள் ஒன்றோடு ஒன்று தழுவிக்கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 48 நாட்கள் நடந்த முகாமிற்கு செலவான தொகை சுமார். ரூ.1.62 கோடி.

Tags : Elephant Refreshment ,Camp ,Mettupalayam , Elephants Refreshment Camp
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு