கடவுள் நம்பிக்கை இல்லாத கமல்ஹாசனுக்கு ஒட்டு போடாதீங்க: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை செய்த நடிகை நமிதா

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை செய்த நடிகை நமிதா, மச்சான்ஸ் தாமரைக்கு வாக்கு போடுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார். கோவை காந்திபுரம் ராம்நகர் தொகுதியில் உள்ள ராமர் கோவில் முன்பு வாக்கு சேகரித்த அவருக்கு இளைஞர்கள் நடமாடியும், பாஜக அதிமுக தொண்டர்கள் குத்தாட்டம் போட்டும் வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் நமிதாவும் வானதி சீனிவாசனும் லேசான நடமாடி உற்சாக படுத்தினர்.

தமிழக கலாசாரம், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்த நடிகை நமிதா அவரை நம்பி வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தாமரை மலர்ந்தே தீரும் மச்சான்ஸ், தாமரைக்கு ஒட்டு போடுங்க என நமிதா தனது வழக்கமான பாணியில் பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் உற்சாகமடைந்தனர்.

நமிதா பேசி முடித்ததும் அவரிடமிருந்து மைக்கை வாங்கிய வேட்பாளர் வானதி சீனிவாசன் வழக்கமாக ஒன்று சொல்வீர்களே அதனை கொஞ்சம் சொல்லுங்கம்மா என கேட்டார். இதனையடுத்து மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டுபோடுங்க என்று கூறி நமிதா கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார். தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் என நடிகை நமிதா கூறினார். 

Related Stories: