×

ரகசிய ஒப்பந்தம் பினராய் அதிர்ச்சி

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், முதல்வர் பினராய் விஜயன் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கொல்லத்தில் நேற்று அவர் பிரசாரத்தில் ஈடுபடும் முன்பாக, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறினார். அது, ‘‘மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜ முயற்சிக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த மதவாத சக்திகளின் உதவியும் எங்களுக்கு தேவையில்லை. ஆனால், கேரளாவில் மதவாத சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜ.வும், காங்கிரசும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளன. பாஜ.வின் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறி இருப்பதில் இருந்தே, இதை புரிந்து கொள்ளலாம்,’’ என்றார்.

Tags : Binarai , Binarai
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...