×

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை பொதுச்செயலாளராக ஷகிலா நியமனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை பொதுச்செயலாளராக நடிகை ஷகிலா நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் மகாத்மா நிவாசன் அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வருபவர் ஷகிலா. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள இவரது வாழ்க்கை ‘ஷகிலா’ என்ற பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அரசியலுக்குள் வர விருப்பம் இருப்பதாகவும், யாராவது அழைத்தால் கட்சியில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் விருப்பம் தெரிவித்து இருந்தார் ஷகிலா. இந்நிலையில், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறையில் இணைந்தார். அவருக்கு தற்போது மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Shakila ,Tamil Nadu ,Congress ,General Secretary ,Human Rights , Shakila
× RELATED சென்னையில் இந்திரா காந்திக்கு சிலை...