×

ரூ.3,700 கோடி வங்கி கடன் மோசடி சென்னை உட்பட 100 நகரங்களில் சிபிஐ சோதனை: 11 மாநிலங்களில் அதிரடி

புதுடெல்லி: சென்னை, திருவாரூர், வேலூர், திருப்பூர் உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 100 நகரங்களில், ₹ 3,700 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ.யினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்சி. ஜோஷி கூறியதாவது: வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலமாக கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களால் பொதுத்துறை வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக, பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 11 மாநிலங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட பண மோசடி புகார்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ, ஐடிபிஐ, கனரா, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா தரப்பில் இருந்து சிபிஐ.க்கு கிடைக்க பெற்றது.

இதையடுத்து, சென்னை, , திருவாரூர், வேலூர், திருப்பூர், கான்பூர், டெல்லி, காஜியாபாத், மதுரா, நொய்டா, பெங்களூரு, குண்டூர், சூரத், ஐதராபாத், பல்லாரி, வதோதரா, கொல்கத்தா, மேற்கு கோதாவரி, மும்பை, போபால், திருப்பதி, விசாகப்பட்டினம், அகமதாபாத், ராஜ்கோட், கர்ணால், ஜெய்ப்பூர் உள்பட 100 நகரங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சோதனைகளில் முறைகேடுகள், மோசடி தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : CBI ,Chennai , Rs 3,700 crore, bank loan, fraud, Chennai, CBI probe
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...