×

சிஏஏ மசோதாவில் அதிமுக இரட்டை வேடம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் முடிவு கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து 93 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து லிட்டருக்கு 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மக்களின் துயரத்தைத் துடைக்கக்கூடியதல்ல. பெட்ரோலை லிட்டருக்கு ₹ 44 ஆகவும், டீசலை லிட்டருக்கு ₹38 ரூபாயாக நிர்ணயித்தால் மட்டுமே உண்மையான விலை குறைப்பு. இதை எல்லாம் நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக தொடர்ந்த அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து சட்டமாக்கிவிட்டு இன்றைக்கு அதை கைவிட வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறுவதை விட இரட்டை வேடம் வேறு ஏதும் இருக்க முடியாது. இதன்மூலம் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிகளை ஏமாற்றிப் பெற்று விடலாம் என்ற எடப்பாடியின் முயற்சிகள் பகல் கனவாகத்தான் முடியும்.

Tags : AIADMK ,CAA ,KS Alagiri , CAA Bill, AIADMK Double, Role, KS Alagiri
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்