×

பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்; பழனியில் பச்சையாறு அணை திட்டம் கொண்டு வரப்படும்: முதல்வர் பழனிசாமி வாக்குறுதி..!

பழனி: பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பழனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது; பல்வேறு துறைகளில் தேசிய விருது பெற்றுள்ளது தமிழ்நாடு. 52.31 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழகத்தில் உயர்க்கல்வி கற்போரின் எண்ணிக்கை 49% அதிகரித்துள்ளது. தை பூச திருநாளை சிறப்பாக கொண்டாட அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு அதிமுக அரசு. ரூ.12.110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நிலமும், வீடும் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும்.

இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்க இல்லந்தோறும் வாஷிங்மேஷின் வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். பழனியில் பச்சையாறு அணை திட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


Tags : Palani ,Pachaiyaru dam ,Chief Minister ,Palanisamy , A new district will be formed with Palani as its headquarters; Pachaiyaru dam project to be brought in Palani: Chief Minister Palanisamy promises ..!
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...