×

மீனவ சமுதாயத்தை பாதுகாக்க, வரைவு தேசிய மீன்வளக் கொள்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? : டி. ஆர். பாலு, எம்.பி. கேள்வி.

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு, அவர்கள், நேற்று  (23 மார்ச் 2021), மக்களவையில், மீனவ சமுதாயத்தை பாதுகாக்க, வரைவு தேசிய மீன்வளக் கொள்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?  என்று கேள்வி எழுப்பினார்.

மாண்புமிகு மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறை இணையமைச்சர் திரு. பிரதாப் சந்திர சாரங்கி அவர்களிடம், இந்திய மீனவ சமுதாயத்தை பாதுகாக்க, வரைவு தேசிய மீன்வளக் கொள்கையில், மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மாநில அரசின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? என்றும், கடல்சார் உணவு ஏற்றுமதியின் மூலம், அந்நிய செலவாணியை பெருக்க, ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்றும், மக்களவையில், திரு. டி. ஆர். பாலு, விரிவான கேள்வியை, எழுப்பினார்.

மாண்புமிகு மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறை இணையமைச்சர், அவர்கள், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு:-

அடுத்த பத்தாண்டுகளுக்கு, மீன் வளத்துறையின் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், அனைவரின் கருத்துக்களையும், மாநில அரசின் ஆலோசனைகளையும், கேட்ட பின்னரே, வரைவு தேசிய மீன் வளக் கொள்கை, 2020 நடைமுறைக்கு வரும் என்றும்,

மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறையின், இணையத் தளத்தில், வரைவு தேசிய மீன் வளக் கொள்கை, 2020 குறித்த, அனைவரின் கருத்துக்களையும் பெறும் வகையில், 11 மாநில மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்றும்,

பிரதம மந்திரி மீன் வளத்துறை திட்டத்தின் கீழ், நீலப் புரட்சியை, நீடித்த வளர்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ரூபாய் இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக,  அனைத்து கடல் சார் மாநிலங்களிலும் முதலீடு செய்யப்படும் என்றும், மாண்புமிகு மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறை இணையமைச்சர் திரு. பிரதாப் சந்திர சாரங்கி அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதுலீர் நாடாளுமன்ற உறுப்பினர்,  திரு. டி. ஆர். பாலு, அவர்களுக்கு, விரிவான பதிலை அளித்துள்ளார்.

Tags : D. R. Balu , டி. ஆர். பாலு
× RELATED 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை...