×

அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன்: மாதவரம் மூர்த்தி பிரசாரம்

திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி, நேற்று புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கரைபட்டு, புள்ளிலைன்  ஊராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அப்போது, பொதுமக்கள்  அவருக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வெற்றி பெற வாழ்த்தி, உற்சாக வரவேற்பளித்தனர். மக்கள் மத்தியில் மாதவரம் மூர்த்தி பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது.

அதேபோல், மாதவரம்  தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 சதவீதம் தரமான கல்வி, கூடுதல் வகுப்பறைகள்,  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப  ஆசிரியர்களை பணியமர்த்தி தனியார் பள்ளிக்கு நிகராக மேம்படுத்தி,  மாதவரம் தொகுதி கல்வியில்  முதன்மை பெற்ற தொகுதியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில்  வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட  கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : I will improve government schools: Madhavaram Murthy campaign
× RELATED சொல்லிட்டாங்க…