×

திமுக திட்டங்களை செயல்படுத்துவேன்: இ.பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் இ.பரந்தாமன் நேற்று காலை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். தொடர்ந்து, புரசைவாக்கம் 78வது வட்டம் தானா தெரு அண்ணா சிலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, ஆட்டோ ஓட்டுனர்கள், இளைஞர்கள், தேநீர் கடைகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். ஆட்டோ ஓட்டுனர்கள், சாலை சீரமைப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைத்தனர் அதனை கண்டிப்பாக பூர்த்தி செய்வதாக தெரிவித்தார். மாலையில், புதுப்பேட்டை 61வது வட்டம் வேலாயுத செட்டி தெருவில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களிடையே திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தயுடன் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும்,  இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், கர்பிணிகளுக்கு ரூ.24 ஆயிரம் என பல்வேறு நலத்திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதேபோல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்னை, குடிசைமாற்று வாரிய வீடுகள், சமூதாய கூடங்கள், நூலகங்கள் அமைத்து தரப்படும் என வாக்குறுதிகளை அளித்து, நாம் ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து  பேசினார். தொடர்ந்து உங்கள் ஒவ்வொருவரின் கோரிக்கைகளை ஒன்று விடாமல் நிறைவேற்றுவேன் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். மக்களும் திமுகவிற்கே வாக்கு என்று உறுதியளித்தனர். பிரசாரத்தின் போது திமுக  கட்சியினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Tags : c. Paranthaman , I will implement DMK projects: E. Barandaman promises
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...