×

தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிலை படுத்துபவர் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் சக்கரபாணி புகழாரம்

தண்டையார்பேட்டை: தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிலை படுத்துபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் இளைய அருணா தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு, பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட 700 ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 23 மாதத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.  தன்னை முன்னிலைப்படுத்தாமல் அவர் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தியதால், இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு இன்று பெற்றுள்ளது. அந்த அளவுக்கு அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்னதையும் செய்திருக்கிறார். சொல்லாத வாக்குறுதியையும் இன்று அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிக்காரர்கள் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள். தேர்தல் சமயத்தில் 505 வாக்குறுதிகள் கூறினோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். இன்னும் 36 மாதங்கள் இருக்கிறது. சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.  தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று முதல்வர் தெரிவித்தார். அதனை வழங்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. தாய்மார்களின் எதிர்பார்ப்பை முதல்வர் நிறைவேற்றி தந்திருக்கிறார். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் அதனை முதல்வர் செயல்படுத்தி இருக்கிறார்.வடசென்னை வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்  ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

The post தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிலை படுத்துபவர் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் சக்கரபாணி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Tamil Nadu ,Minister Chakrapani Pukhazharam ,Thandaiyarpet ,Minister ,Chakrapani ,M. K. Stalin ,M.K.Stalin ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...