×

கொல்கத்தா மாடல் அழகி கொலை வழக்கில் கார் டிரைவர் குற்றவாளி

* உறுதி செய்த நீதிமன்றம்
* விரைவில் தீர்ப்பு வெளியாகும்

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் அருகே கொல்கத்தா மாடல் அழகியை கொன்று புதைத்த வழக்கில் கார் டிரைவர் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விரைவில் இது குறித்த இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.  கொல்கத்தாவை சேர்ந்தவர் மாடல் அழகி பூஜா சிங். வேலை விஷயமாக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரு வந்தார். இங்கு வேலையை முடித்துக்கொண்டு டெல்லி செல்ல திட்டமிட்டு விமான நிலையம் செல்ல கார் ஒன்றை புக் செய்தார். அப்போது பூஜாவின் பணம் நகைக்கு ஆசைப்பட்ட டிரைவர் அவரை ஆள் நடமாட்டம் இல்லா இடத்திற்கு கொண்டு சென்று கொலை செய்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த பணம் நகை ஆகியவற்றை எடுத்துக்கொணடு விமான நிலையம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பூஜாவை குழி தோண்டி புதைத்துள்ளார்.

இது குறித்து கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் புகார்கள் வந்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது, இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. நீண்ட நாட்கள் போலீசார் விசாரணை நடத்தியதில், அதில் கார் டிரைவரான சஞ்சீவினி நகரை சேர்ந்த நாகேஷ் என்பவர் பிடிபட்டார். கடன் சுமை மற்றும் வாகனத்தின் மீதான கடன் அதிகமாக இருந்ததால் மாடல் அழகி பூஜா சிங்கை கொலை செய்து, கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை வைத்து, போலீசார் தேவனஹள்ளி 5வது மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிபதி  போலீசார், கார் டிரைவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் உறுதியானதால் அவரே கொலையாளி என்பதை உறுதி செய்தார். விரைவில் இது குறித்த இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று கூறிய நீதிபதி, வழக்கை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags : Kolkata , Kolkata model, brunette, murderer, car driver, convict
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...