×

பாஜகவை எதிர்த்து கேள்வி எழுப்பாத அதிமுகவினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்: திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்

திருச்சி: பாஜகவை எதிர்த்து கேள்வி எழுப்பாத அதிமுகவினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். வேட்பாளர் பட்டியலை கூட தமிழில் வெளியிடாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பாஜக வெளியிட்டுள்ளது என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் பொதுவாக அடிக்கல் நாட்டி விடுவார்கள். ஆனால் எந்த திட்டத்தையும் நிறைவேற்றமாட்டார்கள். தமிழகத்தில் யாருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை கொண்டுவந்துள்ளதால் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார். அனிதா முதல் பல்வேறு மாணவ மாணவிகள் படிக்க இடம் கிடைக்காமல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் 23 லட்சத்த்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பில்லாமல் தவித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், இளம்பெண்கள், படித்தவர்களின் வேலைவாய்ப்பற்ற நிலை மாற்றப்படும். தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் கொண்டுவரப்படும். அதில் 75% தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், பயோமெட்ரிக் முறை சரியாக செயல்படுவதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் ஊழல் மட்டுமே வெற்றிநடை போடுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டெண்டர் விடப்பட்டு முறையாக பணிகள் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி டெண்டர்கள் அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாலைவசதிகள் மேம்படுத்தப்படவில்லை. முதியோர் உதவித்தொகை சரியாக வழங்கப்படவில்லை. அனைத்திலும் கொள்ளையடிக்கப்பட்டு அரசு கஜானாவில் காசு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர். முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு பணமில்லை என்று கைவிரிப்பதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகளை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : B , Kanimozhi, DMK
× RELATED உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது...