×

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காதவர் தமிழக முதல்வர்: திருத்தணி தொகுதி லட்சுமாபுரம் சு.விஜயன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை அடிக்கடி விவசாயி, விவசாயி என்று கூறிக்கொள்கிறார். விவசாயி என்று கூறும் இவர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிரிடப்படும் கரும்புகளை இந்த ஆலைக்கு அரவைக்கு அனுப்பி கடந்த மூன்றாண்டு காலமாக நிலுவைத் தொகையை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

ஒரு விவசாயிகளின் பிரச்சினைகளை போக்க நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் விவசாயி என்று கூறி போலி வேஷம் போட்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். மேலும் விவசாயிகள் தங்களுடைய தோட்டங்களில் நெல் போன்ற பயிர்களை பயிரிடும் போது எலி குருவி, காட்டுப்பன்றி போன்றவற்றால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனால் தாங்கள் செய்த பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதற்கு நடவடிக்கை எடுத்தப்பாடில்லை. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்காத எடப்பாடி பழனிசாமி தன்னைத்தானே விவசாயி எனச் சொல்லாமல் இருந்தால் நலம் பயக்கும்

Tags : Lakshumapura Chu Vijayan , Chief Minister of Tamil Nadu who does not solve the problems of farmers: Thiruthani constituency Lakshmapuram S. Vijayan
× RELATED சொல்லிட்டாங்க…