×

ராமசாமி கோப்பை ஹாக்கி மார்ச் 29ல் தொடக்கம்

சென்னை: ‘ராமசாமி கோப்பை’ ஹாக்கிப் போட்டி மார்ச் 29ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து எஸ்ஆர்எம்சி விளையாட்டு அறிவியல் மையத்தின் ஹாக்கி பிரிவு இயக்குநரும், ஒலிம்பியனுமான வி.பாஸ்கரன் கூறியதாவது: எஸ்ஆர்எம்சி நிறுவனத்தின் என்பிவி ராமசாமி ஹாக்கி மையம் சார்பில்  ‘என்பிவி ராமசாமி உடையார் கோப்பை’ ஹாக்கிப் போட்டி, மார்ச் 29ம் தேதி தொடங்கி ஏப்.9ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நாளான ஏப்.6ம் தேதி போட்டிகள் நடைபெறாது. எஸ்ஆர்எம்சி  வளாகத்தில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட  செயற்கைப் புல்தரை களத்தில் போட்டிகள் நடைபெறும்.

தமிழகத்தின் பிரபலமான 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இரண்டு பிரிவுகளாக நடக்கும் லீக் சுற்றின் முடிவில், தலா முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஏப்.9ம் தேதி நடைபெறும். அதில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான  நரிந்தர் பத்ரா  பங்கேற்று கோப்பையை வழங்க உள்ளார்.

Tags : Ramasami Cup Hockey , Ramasamy Cup Hockey starts on March 29
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்