×

செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

செய்யூர்: காஞ்சிபுரம் தெற்கு, செய்யூர் (தனி) சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் பாபுவின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்  வீரர்கள் கூட்டம் செய்யூரில் நடந்தது.
 திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் பாபுவை கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு  அறிமுகம்  செய்து  வைத்ததோடு வேட்பாளருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ். இராமச்சந்திரன், இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.எஸ.பாபு ஆகியோர் வரவேற்றனர்.

சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏழுமலை, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிற்றரசு, இடைக்கழிநாடு பேரூராட்சி திமுக செயலர் இனியரசு   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் காஞ்சி பாராளுமன்ற திமுக உறுப்பினர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சூ.க.விடுதலை செழியன், பார்வேந்தன், இமயவர்மன், கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க. ஆதவன், மாவட்ட  நிர்வாகிகள் தமிழினி, அருள்பிரகாசம், திமுக திமுக மாவட்ட துணைச் செயலாளர் தசரதன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், மோகன்தாஸ் ஜனனி, செய்யூர் கே.டி.ஆர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் பேசுகையில்: நமது கூட்டணி கட்சி வேட்பாளர் பனையூர் பாபு 22 வயதில் தனது தாயார் ஒரு அறக்கட்டளை துவங்கி ஏழை எளியவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டு செய்து வருகிறார். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான வேட்பாளர் நமது செய்யூர்  தொகுதிக்கு கிடைத்துள்ளார்.  அவருடைய வெற்றியை என்பது நாம் உறுதி செய்ய வேண்டும்.  கூட்டணி கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். வருகின்ற தேர்தலில் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நமது செய்யூர் தொகுதியில் வெற்றி பெற வைப்பது உறுதி என்றார்.

Tags : Seyyur ,Vizika , Seyyur constituency Vizika candidate introductory meeting
× RELATED கடப்பாக்கம் – ஆலம்பரைகுப்பம் இடையே...