×

வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளருக்கு விசி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

வாலாஜாபாத்: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர சூறாவளி பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  உத்தரமேரூர் தொகுதி வெற்றி வேட்பாளர். க.சுந்தரை  ஆதரித்து வாலாஜாபாத் பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  அம்பேத்கர் சிலையிலிருந்து ராஜவீதி, பஜார்,  விவி கோயில் தெரு, பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட முக்கிய  வீதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தனர். இதில்  பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் வளவன், திருவாங்கரணை பாபு, அகரம் வசந்த், ஊத்துக்காடு திருமாதாசன்,  வழக்கறிஞர் ஐயப்பன், பழையசீவரம் அன்பரசு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : VC ,DMK ,Walajabad , VC collects votes for DMK candidate in Walajabad
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி