தா.மோ.அன்பரசனை ஆதரித்து டி.ஆர்.பாலு தேர்தல் பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆலந்தூர், மடுவின்கரை, மாதவபுரம், வேம்புலி அம்மன் கோயில் தெரு, கொத்தவால் தெரு, ராஜா தெரு, கண்ணன் காலனி போன்ற பகுதிகளில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன் ஆகியோர் உடன்  சென்று பிரசாரம் செய்தனர். அப்போது, டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு முதல்  கையெழுத்திடப்படும். கொரோனா நிதியாக ₹4 ஆயிரம் வீடு தேடி வரும்.  எனவே, தா.மோ.அன்பரசனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’’ என்றார்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ஆ.துரைவேலு, வட்டச் செயலாளர்கள் முரளிகிருஷ்ணன், கே.ஆர்,ஜெகதீஸ்வரன், பகுதி இளைஞர் அணி செயலாளர் பிரவீன்குமார்,   சாலமோன், வினோத்குமார், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் பொறுப்பாளர்கள் இரா.ஜோதி, ஆதம்ரமேஷ், முன்னாள் மண்டல தலைவர் சிக்கந்தர், மதிமுக பகுதி செயலாளர் கத்திபாரா சின்னவன்,   விடுதலை சிறுத்தைகள் கட்சி பகுதி செயலாளர் சீராளன், மனிதநேய ஜனநாயக கட்சி  மாவட்ட செயலாளர்  அல்தாப் உசேன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

More