×

பினராய்க்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: டாலர் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளின் மீது  கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பார்சல் மூலமாக பல நூறு கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட வழக்கில்  தொடர்புடைய சொப்னா மற்றும் அவருடைய கும்பலுக்கு, டாலர் கடத்திய வழக்கிலும் தொடர்பு இருப்பது  தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சொப்னாவின் ஆடியோ ஒன்று வெளியானது.

அதில். ‘டாலர் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு உண்டு என கூற வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர்,’ என அவர் கூறியிருந்தார். இது, கேரளாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சிக்க வைப்பதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்,’ என  கூறி, அந்த அதிகாரிகளின் மீது கேரள குற்றப்பிரிவு  போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இதன் மூலம், மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Kerala Crime Branch ,Binarai , Kerala Crime Branch police case against enforcement officials accused of plotting against Binarai
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...