×

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபாவுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கிடையாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி. இவர் மீது சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக  டெல்லி அலுவலகத்தில் மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மெகபூபா வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனால், வரும் 22ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்நிலையி்ல், இந்த வழக்கு நீதிபதி டிஎன்.படேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெகபூபா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், ‘‘மெகபூபா நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் நிர்பந்திக்கக் கூடாது. எவ்விதமான ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஆஜராக கோருவது அரசியலமைப்புச் சட்டம் 20(3) பிரிவை மீறுவதாகும்,” என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், ``இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்த விதமான சலுகையும் வழங்க முடியாது. அமலாக்கத் துறை சம்மனுக்கு தடை விதிக்கவும் முடியாது,’’ எனக் கூறி வழக்கை வரும் ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Kashmir Chief Minister Mehbooba ,Delhi High Court , Delhi High Court orders no enforcement of enforcement summons issued to former Kashmir Chief Minister Mehbooba
× RELATED 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை...