×

உத்திரமேரூர், அம்பத்தூர், திருநின்றவூரில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

சென்னை: உத்திரமேரூர், அம்பத்தூர், திருநின்றவூரில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தமிழக சட்டமன்ற ேதர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், 21ம் தேதி (நாளை) அவர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 20ம் தேதி (இன்று) காலை 8.30 மணியளவில் பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களை ஆதரித்து தக்கலை மெயின்ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மாலை 4 மணியளவில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 5.30 மணியளவில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருமங்கலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 21ம் தேதி (நாளை) காலை 8.30 மணியளவில் செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து உத்திரமேரூரில் பிரசாரம் செய்கிறார். மாலை 4 மணியளவில் அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், மதுரவாயல் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அம்பத்தூரிலும், மாலை 5 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருநின்றவூரிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள இடங்களில்  பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம்  கொண்டும் திமுகவினர், வழியில் வேறு எவ்வித  நிகழ்ச்சிகளையும்  ஏற்பாடு செய்ய வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Uthamerur ,Ambatur ,Thirnidpur ,BC ,Q. Stalin , MK Stalin's campaign tomorrow in Uthiramerur, Ambattur and Thiruninravur
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...