×

விமான பயணச் சீட்டு ரத்து கட்டணத்தை சீரமைக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? : மக்களவையில் டி. ஆர். பாலு, எம்.பி., கேள்வி.

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு, அவர்கள், நேற்று  (18 மார்ச் 2021), மக்களவையில், விமான பயணச் சீட்டு ரத்து கட்டணத்தை சீரமைக்க, மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய விமானத் துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களிடம், விமான பயணச் சீட்டு ரத்து கட்டணத்தை, அனைத்து விமான நிறுவனங்களிலும், ஒரே மாதிரியாக சீரமைக்க, மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்றும், ரத்து கட்டணம் 50 விழுக்காட்டிற்கும்  குறைவாக இருக்கவும், எரி பொருளுக்கான கூடுதல் வரி, பயணிகளுக்கு திரும்ப கிடைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்றும்,  மக்களவையில், திரு. டி. ஆர். பாலு, விரிவான கேள்வியை, எழுப்பினார்.

மாண்புமிகு மத்திய விமானத் துறை இணையமைச்சர், அவர்கள், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு:-விமான பயணச் சீட்டு ரத்து கட்டணத்தின் அளவு, பயணச் சீட்டு வாங்குவதற்கு முன்பாகவே அறிவிக்கப்படவும், பயனாளிகள் மேம்பாட்டு கட்டணம், விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணங்களை, பயணிகளுக்கு திருப்பித் தரவும், விமானத் துறை இயக்குநரகத்தின் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றும்,விமான பயணச் சீட்டு ரத்து கட்டணத்தின் அளவு, விமான அடிப்படை கட்டணம் மற்றும் எரி பொருளுக்கான கூடுதல் வரியை விட, அதிகரிக்காமல் இருக்கவும், விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும்,

 பயணச் சீட்டு முகவர்கள் தங்களது சேவைக் கட்டணத்தை, பயணச் சீட்டு வாங்குவதற்கு முன்பாகவே அறிவிக்க வேண்டுமென, விமானத் துறை இயக்குநரகம், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெளிவுப்படுத்தியுள்ளது என்று, மாண்புமிகு மத்திய விமானத் துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதுலீர் நாடாளுமன்ற உறுப்பினர்,  திரு. டி. ஆர். பாலு, அவர்களுக்கு, விரிவான பதிலை அளித்துள்ளார்.

Tags : Central Government ,Lok Sabha ,R. Balu , டி. ஆர். பாலு,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...