×

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 அல்ல; ரூ. 4.72 லட்சம் : புதிய பிரமாண பத்திரத்தில் தகவல்!!

திருவொற்றியூர் : திருவொற்றியூரில் போட்டியிடும் சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல; 4.72 லட்சம் ரூபாய் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல, 4,72,900 என குறிப்பிடப்பட்டு புதிய பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் புதிய பிரமாணப்பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. 2016-2017ல் ரூ.2,65,890, 2017-18 ல் 2,82,900 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Simon ,Thiruthur , Tiruvottiyur, Seeman, Annual Income
× RELATED அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ்