×

முதல்வருக்கு எதிராக பாஜக சக்கர நாற்காலி பேரணி...இடதுசாரிகள் எங்களுக்கு ஓட்டு போட வேணும்!...மம்தாவின் திடீர் ஆதரவு கோரிக்கையால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வருக்கு எதிராக பாஜக சக்கர நாற்காலி பேரணி நடத்திய நிலையில், இடதுசாரிகள் எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று மம்தா திடீர் ஆதரவு கோரியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் கிட்டதிட்ட 34  ஆண்டுகளாக ஆட்சி நடத்திய இடதுசாரி முன்னணி அரசை தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி வீழ்த்தினார். கடந்த 2011ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று அரியணை ஏறிய மம்தா, தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தி  வருகிறார். ஆனால், மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக செயலாற்றி வரும் பாஜகவால் மம்தாவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக தன்னால் வீழ்த்தப்பட்ட இடதுசாரிகள்,  பாஜகவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, திரிணாமுல் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பேசினார்.

ஏற்கனவே யாரை வீழ்த்தி ஆட்சியை பிடித்தாரோ, அவர்களது ஆதரவையே மம்தா பானர்ஜி நாடியிருப்பது அவரது அரசியல் பயணத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மாநில அரசியலில் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் பாஜகவை  வீழ்த்த ஏற்கனவே எதிர் துருவத்தில் இருக்கும் இடதுசாரிகளின் ஆதரவை மம்தா கோரியிருப்பது அவர் பலவீனமாகிவிட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு  முன் நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு திரும்பிய போது, மம்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளார். இடது காலில் ஏற்பட்ட வலியை கூட பொருட்படுத்தாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து பேரணி, பிரசாரங்களை செய்து வருகிறார்.  மம்தா மக்களிடம் அனுதாபத்தை தேடுவதற்காக சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரம் செய்வதாக குற்றச்சாட்டி வரும் பாஜக, நேற்று சக்கர நாற்காலி போராட்டத்தை நடத்தியது.

பாஜக முன்னணி தலைவர்களும், கட்சி தொண்டர்களும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து நடத்திய பேரணியானது, எக்ஸைட் முதல் ஹஸ்ரா வரை நடந்தது. அப்போது மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில், சக்கர நாற்காலி பேரணி நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இவ்வாறாக, திரிணாமுல் - பாஜக இடையே கடுமையான எதிர்ப்பு பேரணி, போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அரசியல் களம்  தீவிரமடைந்துள்ளது.
 

Tags : Fajaka ,mamta , BJP wheelchair rally against PM ... Left should drive us! ... Mamata's sudden demand for support
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...