×

சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் வேட்புமனு தாக்கல்..!!

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியானது மலைவாழ்மக்களின் தொகுதியாகும். இத்தொகுதியில் அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினராக சந்திரசேகர் இருந்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறு அதிமுக தலைமைக்கு 3 நாள் கேடு விதித்திருந்தார். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இவருக்கு பதிலாக சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், கடந்த 11ம் தேதி கொல்லிமலையில் அதிமுக-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அச்சமயம், சேந்தமங்கலம் தொகுதியில் 5 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளேன். இப்பகுதியில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது. இருப்பினும் அதிமுக தலைமை வாய்ப்பு தராததால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டார். இதனிடையே சந்திரசேகர் சுயேட்சையாக போட்டியிடுவதை தடுக்கவும், இவரை வெளியேற்றம் செய்ய வேண்டும் எனும் நோக்கில் அமைச்சர் தங்கமணி பல்வேறு தொல்லைகளை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான், சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ரமேஷ் என்பவரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சுயேச்சியாக அதிமுக-வின் இவர் களமிறங்குகிறார். சந்திரசேகர் நேற்று காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது. தன்னை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி மிரட்டி வருகிறார். எனவே தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் தனக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. அதிமுகவை எதிர்த்து நிச்சயம் வெற்றிபெறுவேன். அதிமுகவை எதிர்த்து தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று சந்திரசேகர் தெரிவித்திருப்பது குறிப்பிடடதக்கது.


Tags : Chanthamangalam ,L. PA Chandrasekaran , Chandamangalam constituency, AIADMK candidate, Chandrasekaran, filed nomination
× RELATED சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக...