×

சந்திரசேகரன் வரிசையில் தோப்பு வெங்கடாசலம்.. சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காததால் எம்எல்ஏக்கள் சுயேட்சையாக களம்... அதிமுக தலைமைக்கு புது தலைவலி!!

சென்னை :  சட்டமன்ற உறுப்பினராக அந்த பதவியில் இருந்துவிட்டு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஏமாந்து போன அதிமுக எம்எல்ஏக்கள் பலர் கட்சிக்கு எதிராக கொதித்தெழுந்து சுயேட்சையாக களம் இறங்கி இருப்பது அதிமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

*நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பபெற்று எம்எல்ஏ ஆனார். இந்தசூழலில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகரனுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனை கண்டித்து கடந்த 11ம் தேதி கொல்லிமலையில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சந்திர சேகரன், தமக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று அதிமுக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தமக்கு மீண்டும் சீட் வழங்காததற்கு அமைச்சர் தங்கமணியே காரணம் என்றும் குற்றம் சாட்டிய சந்திரசேகரன், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். மேலும் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதே போல் அதிமுக தலைமை வாய்ப்பு தராததால் சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா இருந்தபோது அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்த முறையும் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து தோப்பு வெங்கடாசலம் களம் காண்கிறார்.  பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அவர் இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.இதனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Venkadasalam ,Chandrasekaran , Chandrasekaran, Thoppu Venkatachalam
× RELATED இலக்கை நிர்ணயித்து உழைத்தால் நினைத்த...