×

Mr.வாக்காளர்: படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை; திம்மூர் எம்.சுகுணேஷ்வரன்

செய்யூர் தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏவான டாக்டர் ஆர்.டி.அரசுவை இந்த அதிமுக அரசு எந்த வகையிலும் செயல்பட வைக்காமல் முடக்கியே வைத்து விட்டனர். இதனால் செய்யூர் தொகுதி எந்த வித வளர்ச்சியும் அடையவில்லை. இந்ததொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும், தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளிலிருந்து மக்களை காத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டித் தர வேண்டும், தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மேம்படுத்த புதிய தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும். தேவையான இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று எம்எல்ஏ ஆர்.டி.அரசு பல்வேறு முயற்சிகளை செய்தும், சட்டமன்றத்தில் பேசியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் திமுக எம்எல்ஏ என்ற ஒரே காரணத்திற்காக இந்த செய்யூர் தொகுதியையே வளர்ச்சியற்ற தொகுதியாக்கி விட்டது இந்த அதிமுக ஆட்சி. இந்த ஆட்சியாளர்களால் கடந்த 5 ஆண்டுகளில் செய்யூர் தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மக்கள் ஆளும் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.


Tags : Mr.Voter ,Thimmur M. Sukuneshwaran , Mr.Voter: Not creating jobs for educated youth; Thimmur M. Sukuneshwaran
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...