×

அரவக்குறிச்சி அருகே பிரிவு சாலை வழிகாட்டி பலகையில் ஊர் பெயர் எழுத வலியுறுத்தல்

அரவக்குறிச்சி : கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் அருகே அரவக்குறிச்சி பிரிவுக்கு வழிகாட்டி பலகை அமைக்கப்படாததால் அவ்வழியே வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். பிரிவு சாலையில் பழுதடைந்த வழிகாட்டும் பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் வழியாக அரவக்குறிச்சி, பள்ளபட்டி, பழனி, தாராபுரம் பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் அருகே அரவக்குறிச்சி பிரிவு வழியாக செல்ல வேண்டும். பிற வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பழனிக்கு பாத யாத்திரை செல்வதற்கும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது.

இதன் வழியாக தினசரி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. தடாகோவில் அருதே அரவக்குறிச்சி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக சேதமடைந்தது.

இந்நிலையில் அப்பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகளும் பழனிக்கு பாதயாத்திரை செல்வோரும் அப்பகுதிக்கு வரும் பொழுது, வழி தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இவ்வளவு முக்கியமான கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் அருகே அரவக்குறிச்சி பிரிவுக்கு வழிகாட்டி பலகைபலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi , Aravakurichi: As there is no sign board for the Aravakurichi section near Tadago on the Karur-Dindigul National Highway
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...