ஜெய்ஸ் இ முகமது தளபதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கமானது காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவனான சஜத்  ஆப்கானி ஏற்கனவே இந்திய அரசால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் சோபியன் மாவட்டத்தின் ராவல்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கடந்த  சனிக்கிழமையன்று அந்த பகுதியை காவல்துறையுடன், ராணுவமும் சுற்றி வளைத்தது. கைதாக மறுத்த தீவிரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த சண்டையில் ஜெய்ஸ் இ முகமது  இயக்கத்தின் முக்கிய தளபதியான சஜத் ஆப்கானி கொல்லப்பட்டது உறுதியானது. லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதி ஜஹாங்கீர் அகமது வனியும் கொல்லப்பட்டான் என்று ராணுவம் கூறியுள்ளது

Related Stories:

>