×

அனைத்து மாநகராட்சியிலும் செம்மொழிப் பூங்கா விவசாயிகள் அனைவருக்கும் இலவச மும்முனை மின் இணைப்பு: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.விவரம்:

* அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழகத்திற்கெனத் தனியே மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும். இதற்கெனக் கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும். உரிய பரிந்துரைகள் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்படும்.
* மத்திய அரசுப் பணிகளுக்கும், மத்திய பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும், இணைத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தும்.
* தமிழை, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்க வேண்டுமெனத் திமுக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.
* உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
* வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காகத் தமிழக அரசில் வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை என்று ஒரு புதிய அரசுத் துறை உருவாக்கப்படும்.
* கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஊழல் புகார்களுக்கு ஆளான ஊழல் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து, திமுக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.
* கடந்த பத்தாண்டுகளில் திறமையற்ற-ஊழல் நிறைந்த-கையாலாகாத அதிமுக அரசின் தவறான நிர்வாகம் மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் தமிழகத்தின் கடன்சுமை ₹9 லட்சம் கோடி அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ₹1,25,000/- கடனோடு பிறக்கிறது. இந்தக் கடன் சுமையை இறக்குவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான, சரியான நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். குழுவின் அறிவுரைகள் உரிய ஆய்வு செய்யப்பட்டு, அரசு முடிவுகளை விரைந்து எடுக்கும்.
* மத்திய அரசு அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி; இவற்றை ரத்து செய் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தப்படும்.
* சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும், தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.



Tags : Classical Park ,DMK , Classical parks in all corporations To all farmers Free three-way electricity connection: Announcement in DMK election manifesto
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி