×

மேற்குவங்க நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஜி-23 தலைவர்களின் பெயர் ‘மிஸ்சிங்’: காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

புதுடெல்லி: மேற்குவங்க தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அதிருப்தி தலைவர்கள் 23 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில பேரவை தேர்தலுக்கான 30 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் எனப்படும் ஜி-23 தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட எந்த தலைவர்களின் பெயரும் பட்டியலில் இல்லை. அதேநேரம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளன.

அதில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், ரன்தீப் சுர்ஜேவாலா, தீபா தாஸ்முன்சி, தீபந்தர் ஹூடா, அகிலேஷ் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் முகர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து அசாருதீன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தால் ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கபில்சிபல் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கட்சியில் நிரந்தர தலைவர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மீண்டும் வலியுறுத்தினர். கிட்டதிட்ட நாற்பது ஆண்டுகளாக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக குலாம்நபி ஆசாத் போன்றோர் பணியாற்றிய நிலையில் அவர்கள் தற்போது 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதால் கட்சிக்குள் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : G-23 ,WTO ,Congress Party , The name of the G-23 leaders on the West Bengal star speaker list is ‘Missing’: a stir in the Congress party
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...