×

அமைச்சர் சம்பத் சொத்து மதிப்பு 48 லட்சம்: மனைவி, மகன், மகள் பெயரில் 3.37 கோடி சொத்து

கடலூர்: கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சம்பத் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் வழக்கு விவரங்கள் மற்றும் தன்னுடைய அசையும் சொத்து விவரங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.அதன்படி அமைச்சர் சம்பத் தன் மீது இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் ஏதுமில்லை, குற்ற வழக்குகள் நிலுவையில் ஏதுமில்லை, விசாரணை வழக்குகள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ. 7 லட்சத்து 19 ஆயிரத்து 894 மட்டுமே வருமானம் ஈட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அசையும் சொத்துக்களான கார் மற்றும் நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட வகைகளில் ஒரு கார் மற்றும் ஒரு டிராக்டர் இதுபோன்று 96 கிராம் தங்க நகை என ரூ.48 லட்சத்து 40 ஆயிரத்து 77 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கூட்டுக்குடும்ப அசையும் சொத்தின் மதிப்பு 2,05,684 என குறிப்பிட்டுள்ளார். மனைவி தமிழ்வாணிக்கு ரூ.67 லட்சத்து 27 ஆயிரத்து 926 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், கடந்த 2019-20ம் ஆண்டில் மனைவி தமிழ்வாணி ரூ.17 லட்சத்து 80 ஆயிரத்து 403 வருமான காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோல் மகள் திவ்யாவிற்கு ரூ. ஒரு கோடியே 47 லட்சத்து 92 ஆயிரத்து 786 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், இதில் ஒரு கார் மற்றும் 160 கிராம் தங்க நகைகள் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.மகன் பிரவீனுக்கு ரூ.ஒரு கோடியே 22 லட்சத்து 6 ஆயிரத்து 939 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தங்க நகைகள் 80 கிராம் அடங்கும். மேலும் மகன் பிரவீன் பெயரில் கார்கள் ஏதும் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Minister ,Sampath , Property of Minister Sampath Value 48 lakhs: Property worth Rs 3.37 crore in the name of wife, son and daughter
× RELATED முதல்வர் பதவிக்காக சசிகலாவை காட்டிக்...