×

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:
ஆலந்தூர்  
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக  தா.மோ.அன்பரசன் (61) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சைதாப்பேட்டை
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளாராக மா.சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கிண்டி தொழிற்பேட்டை குடியிருப்பில் வசிக்கிறார். 1976ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1996-2006 ஆண்டில் மாநகராட்சி அவைத் தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணி துணை பொதுச் செயலாளராக இருந்தார். 2006-2011ம் ஆண்டு சென்னை மாநகர மேயராக இருந்தார். 2016ம் ஆண்டு சைதாப்பேட்டை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

துறைமுகம்
துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளராக பி.கே.சேகர்பாபு (58) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், வட சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், விக்னேஷ், ஜெசிமன் என்ற மகன்களும், ஜெசிமா என்ற மகளும் உள்ளனர். இவர், தற்போது, துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார்.

எழும்பூர்
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பரந்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார். எழும்பூர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பு இவரது சொந்த ஊர். தற்போது பூந்தமல்லியில் வசித்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்ற வக்கீலாக உள்ளார். திமுக வக்கீல் அணி இணை செயலாளராகவும் உள்ளார்.

தாம்பரம்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.ஆர்.ராஜா (65) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர், 2006 - 2011, 2016 - 2021 வரை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

பல்லாவரம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளாராக இ.கருணாநிதி (62) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 2016 முதல் 2021 வரை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளராக ச.அரவிந்த் ரமேஷ் (53) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், மாநகராட்சி கவுன்சிலர், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக செயலாளராக இருந்துள்ளார். தற்போது, இதே தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார்.

மாதவரம்
மாதவரம் தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.சுதர்சனம்(62) அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ.பி.எல். வரை படித்துள்ள இவர்  தற்போது மாதவரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நகர மன்ற உறுப்பினர், நகர மன்ற துணை தலைவர் போன்ற பதவிகளையும், தற்போது சென்னை வட கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார்.

திருவொற்றியூர்
திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.பி.சங்கர்(48) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை கே.பரசுராமன். சென்னை மாநகராட்சி 5வது வட்ட மாமன்ற உறுப்பினர். தமிழ்நாடு மின்சார வாரிய ஆலோசனை குழு உறுப்பினர். தற்போது திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர். இவர், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமியின் சகோதரர்.

அம்பத்தூர்
அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக ஜோசப் சாமுவேல்(56) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளராக உள்ளார். அம்பத்தூர் நகரமன்ற உறுப்பினராக 3 முறை யும், அம்பத்தூர் நகரமன்ற துணை தலைவராகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்பத்தூர் மண்டல குழு தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

மதுரவாயல்
மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளராக காரம்பாக்கம் கணபதி (62) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது மதுரவாயல் பகுதி திமுக செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி 150வது வார்டு உறுப்பினராக இருந்துள்ளார்.

விருகம்பாக்கம்
விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக பிரபாகர் ராஜா (32) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஏ.எம்.விக்கிரமராஜா. பிரபாகர் ராஜா எம்டெக், எம்பிஏ படித்துள்ளார். தற்போது சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார்.

தி.நகர்
தி.நகர் தொகுதி திமுக வேட்பாளராக ஜெ.கருணாநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த பழம்பெரும் திமுகவின் பழக்கடை ஜெயராமனின் 2வது மகன். மறைந்த  திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏவின் சகோதரர். 2006-2011ல்  தி.நகரில் கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.

ஆர்.கே.நகர்
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளராக ஜே.ஜே எபினேசர் (46) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், எம்.காம் பி.எல் படித்துள்ளார். வடசென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார்.

பெரம்பூர்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஆர்.டிசேகர் (52) அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது மாநில இளைஞர் அணி துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். 2006-2011 வரை சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும், 2019ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

ராயபுரம்
ராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஐட்ரீம்ஸ் மூர்த்தி (55) அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளராக உள்ளார். 40 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக உள்ளார்.

வில்லிவாக்கம்
வில்லிவாக்கம்  தொகுதி திமுக வேட்பாளராக அ.வெற்றி அழகன் (42) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளார்.  இவர்  பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் என்பது குறிப்பிடதக்கது.

Tags : Chennai ,Kanchi ,Tiruvallur district , Chennai, Kanchi and Tiruvallur district DMK candidates biodata
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...