×

75 ஆண்டு சுதந்திர தின விழா.. தண்டி யாத்திரையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: கொடி காத்த குமரனின் பெருமைகளை நினைவுக் கூர்ந்தார்!!

டெல்லி : நாடு சுதந்திரம் அடைந்ததன் நோக்கத்தை தற்சார்பு இந்தியா நிறைவேற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களைஎன்றென்றும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினம் 2022ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டின் 75 இடங்களில், 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.  

அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில்  ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். முன்னதாக சபர்மதி ஆசிரமத்தில் காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தின் ஹ்ரிடே குஞ்சில் பிரதமர் மகாத்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். அபய் காட் அருகே நடந்த ஒரு சிறப்பு கண்காட்சியில் படங்கள், பத்திரிகைகள் மற்றும் பிற தொகுப்புகளையும் அவர் பார்வையிட்டார்.

இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய மோடி, நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் செய்த தியாகங்களை பட்டியலிட்டார். மகாத்மா தொடங்கிய தண்டி யாத்திரையின் மூலம் விடுதலைப் போராட்ட வெட்கை மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது என்றும் தமிழ்நாட்டில் விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த கொடி காத்த குமரனின் பெருமைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்னர் பிரதமர் மோடி, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டியை நோக்கி 21 நாட்கள் நடைபயண இயக்கத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஏராளமானோர் வெண்ணிற ஆடை அணிந்தபடி, இந்த யாத்திரையில் பங்கேற்றனர்.  



Tags : 75th Independence Day Celebration ,Modi ,Dandi ,Yatra ,Kumaran , பிரதமர் மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...