×

கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியை தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை அழுத்தம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியை தேர்தலில் போட்டியிடுமாறு பாரதிய ஜனதா தலைமை அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு கேட்க தயாராகி வருகிறார். அதே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருவதால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நேரம் கிடையாது என்று பாஜக தலைமைக்கு அவர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள பாஜக அவருக்கு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்று தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்கவைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணியும், ஆட்சியை பிடிக்க ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தீவிரம் காட்டி வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் கடந்த காலத்தில் பல பிரச்சனைகள் எழுந்தன. இதற்கு தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஐயப்பன் கோவிலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்க கூடாது என்று அவர் கூறி இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இதுபோன்ற தோல்வி சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க கூடாது என்பதற்காகவே அமைச்சர் கோவில் நிர்வாகத்திற்கும் பக்தர்களுக்கும் ஆதரவாக பேசுவதாக பாரதிய ஜனதா புகார் கூறியுள்ளது.


Tags : Bhajaka ,Suresh Gobi ,Kerala , BJP
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...