×

மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் விவரம்!!

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டது. ஒரு சில கட்சிகளின் தொகுதி பட்டியல் மட்டுமே வெளிவந்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டியில் போட்டியிடுகிறது. வைகோவின் மதிமுக வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, பல்லடம், சாத்தூர், அரியலூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி தனி மற்றும் தளி ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Humanities People's Party ,National Party of the People's Party , பாபநாசம்
× RELATED திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள்...