×

பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தடை

மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ். பாஜ.வில் சேர்ந்த இவர், தற்போது நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள தேப்ரா தொகுதியில் அக்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  மேற்கு வங்கத்தில் 2019 மக்களவை தேர்தலின்போது நடந்த வன்முறைகள் தொடர்பாக பாரதி கோஷ் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக  உச்ச நீதிமன்றத்தில் கோஷ் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநில அரசு என் மீது வீண் பழி சுமத்தி, பொய் வழக்குகளை பதிவு செய்து தொல்லை கொடுக்கிறது. இந்த வழக்குகளில் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள், ‘அவர் மீது சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது,’  என்று போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டது.


Tags : Prohibited from taking action against female IPS officer
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...