×

அக்கா ஏன் விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது? அமித்ஷா பிரசாரத்தில் அதிர வைத்த பாடல்

தமிழகத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குமரி மாவட்டம் வருகை தந்திருந்தார். அவர் ரோடுஷோவில் பங்கேற்றார். திறந்த ஜீப்பில் சுமார் ஒரு கி.மீ தூரம் கையசைத்தவாறே வந்துகொண்டிருந்தார்.  அவர் வருவதற்கு முன்னதாக முக்கிய சந்திப்புகளில் மேளதாளங்கள் இசைக்கப்பட்டு பிரசார பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதனை கட்சியினர் ரசித்துக்கொண்டு இருந்தனர். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பெருமளவு திரண்டிருந்த  தொண்டர்கள் மத்தியில் ‘‘அக்கா ஏன் விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது? ஓடும் பஸ்சில் பலாத்காரம் நடக்குது, அதுக்கு நம்ம ஆட்சி வந்தாதான் தீர்வு’’ என்ற பாடலை இசைக்கவிட்ட வண்ணம் இருந்தனர்.

 தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பது போலவும், பா.ஜ ஆட்சி வந்தால்தான் விலைவாசி குறையும் என்ற ரீதியில் இசைக்கப்பட்ட பாடலால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அவசர அவசரமாக அவர்கள் உடனே அந்த பாடலை நிறுத்த  கூறியதுடன் மீண்டும் அந்த பாடலை இசைக்க செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். பின்னர் பிரசார பாடல் இசைப்பது நிறுத்தப்பட்டது. இதனால் பிரசாரத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : Akka ,Amitsha , Akka, why is the price going up? The song that shook the Amitsha campaign
× RELATED நித்யா அக்காவுடன் ஆயிரம் மேடைகளுக்கு மேல் பண்ணிட்டேன்!