×

பொன்னேரியில் பாஜவினர் தேர்தல் பிரசார பேரணி

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் பொன்னேரியில் தேர்தல் பிரசார பேரணியை பாஜவினர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் பொன்னேரி தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜா கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர்  ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், மகாலட்சுமி, மாநில மகளிர் அணி சோபா, ஹேமா, தொகுதி பொறுப்பாளர் சந்திரமவுலி, அரசு தொடர்பு செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் இருசப்பன், நந்தன், பொன்னேரி நகர தலைவர் கோட்டி, மாவட்ட ஊடகப்பிரிவு கோகுலகிருஷ்ணன், மாவட்ட பிரசார பிரிவு ராஜசேகர், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், இளைஞரணியினர் மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Bonnery , BJP election campaign rally in Ponneri
× RELATED பொன்னேரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16...