×

பாமக தேர்தல் அறிக்கையில் முரசு சின்னம் புறக்கணிப்பு: தேமுதிகவினர் கடும் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தொகுதி உடன்பாடு உள்ளிட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த கால தேர்தல்களில் வட மாவட்டங்களை பொறுத்தவரை பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு இருந்தது.இதனால் அந்த பகுதிகளில் தேமுதிக, பாமக ஆகிய இருகட்சிகளும் சண்டைக்கோழிகளாக இருந்தன. ஆனாலும் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒன்று சேர்ந்தது. அப்போது சேலத்தில் போட்டியிட்ட சுதீஷ், டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்தார். இதற்கு காரணம், பாமக எங்களுக்கு வேலை செய்யவில்லை. மொத்தமாக காலை வாரிவிட்டது என்று சுதீஷ் குற்றம்சாட்டினார். இந்நிலையில் தற்போதும் அதிமுக கூட்டணியில் மீண்டும் இரு கட்சிகளும் இணைந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த தேமுதிக, பாமகவிற்கு ஒதுக்கிய அளவிற்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கோரி வந்தது. 10 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்குவதாக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால் தேமுதிக அதிருப்பதி அடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் மோதல் போக்கு என்பது நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பாமக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையின் பின்பக்க அட்டையில், சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆகியவை என அச்சிடப்பட்டுள்ளன. இதில் தேமுதிகவின் சின்னமான முரசு சின்னம் இடம்பெறவில்லை. முரசு சின்னத்தை பாமக புறக்கணித்துள்ளதால் தேமுதிகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.




Tags : Murasu ,BJP ,Temujin , Murasu symbol boycott in BJP election manifesto: Temujin shocked
× RELATED போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது