×

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருவள்ளூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 4902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில்  8338 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 6564 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 6452 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை  செய்யும்  இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

அதில் 5 சதவிகித இயந்திரங்களை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் விதமாக 3 இயந்திரங்களையும் தலா 245 வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கும் அனுப்பு வகையில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பா.பொன்னையா நேரில் ஆய்வு செய்து அனுப்பி வைத்தார். அப்போது, கலெக்டர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 23,600 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவராகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பஜார் வீதி ஆகிய இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள், பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் கலெக்டர் கூறினார்.

Tags : Machines ,Thiruvallur District , Tiruvallur, 10 Assembly constituencies, polling
× RELATED தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1.58...