பிஇஎம்எல் தொழிலாளர்களின் தொடர் தர்ணா போராட்டம்:எம்எல்ஏ நாராயணசாமி ஆதரவு

தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல். தொழிலாளர்களின் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட பங்காரு பேட்டை எம்எல்ஏ நாராயணசாமி மத்திய அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்தும், தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார்.  பி.இ.எம்.எல்.தொழிற்சாலையை தனியாருக்கு வழங்க கூடாது என்று கோரி தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் தர்ணா போராட்டத்தில் பங்காரு பேட்டை தொகுதி எம்எல்ஏ நாராயணசாமி கலந்து கொண்டு தன் ஆதரவை தெரிவித்து பேசினார்.  தங்கவயல் பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை எதிர்த்து  பி.இ.எம்.இ‌.எல்.தொழிற்சங்கம் சார்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர் போராட்டங்களை நடத்த தீர்மானித்து அதன் படி கடந்த 16ம் தேதி முதல் தொழிற்சாலை எதிரே தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  14வது நாளாக நடந்து வரும் தர்ணா போராட்டத்தில் பங்காரு பேட்டை எம்எல்ஏ நாராயணசாமி கலந்து கொண்டு, பி.இ.எம்.எல். தொழிற்சாலையை மத்திய அரசு தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும்,‌ தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார்.

Related Stories:

>